சைவமே அசைவமானால் எதை உண்பேன்?
பசுவதையை சட்டம் போட்டு தடை செய்து கொண்டு நாடாளும் அந்த “நல்லோரிடம்” மாமிசத்தை உண்ணாவிட்டால் எதை உண்பது என்று கேட்டால் தாவர உணவை உண்ணுங்கள் என்று தயங்காமல் பதில் கூறுகிறார்கள். தாவரங்கள் உயிரில்லாதவை உணர்வில்லாதவை என்பது இவர்களின் வாதமானால் அது அறியாமையின் வெளிப்பாடே.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு
முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் தாவரங்களுக்கு உயிர் உண்டு; அவை சுவாசிக்கின்றன; உணவு உட்கொள்கின்றன என்பதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து நிரூபித்தார். நுண்ணிய மின் கருவிகளைக் கொண்டு, தாவரங்களின் உயிர் அணுக்களை ஆராய்ந்தவர் அவர். ஆக, சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் வாழ்வது சாத்தியமல்ல என்பதே உண்மை!
தாவரங்களாலும் வலியை உணர முடியும்:
உயிருள்ளவை ஆனாலும் தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே
தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என்றும்
இவர்கள் வாதிடலாம். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர்கின்றன என்று
நமக்குக் கற்றுத் தருகிறது. 20
Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத
காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி
ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு
மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம்
தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு
சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை
வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு
தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை
வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு
அறிவிக்கின்றன.
உயிருண்ணும் தாவரங்கள்
அறிவியலும் ஆராய்ச்சிகளும் வளரவளர
தாவரங்களின் பல்வேறு மர்மங்களை உலகம் அறிந்து வருகிறது. தாவரங்களுக்கு நம்மைப்
போல் நரம்புகள் இல்லை. எனினும், உணர்ச்சியை
அறிவிக்க, தாவரங்களில் உள்ள சில உயிரணுக்கள்
பயன்படுகின்றன. தொட்டாற்சுருங்கி (Mimosa - மிமோசா) என்று ஒரு தாவரம் இருக்கிறது. இது தொட்டவுடன்
சுருங்கிக் கொள்ளும். ஏதேனும் பட்டால், இதன் இலைகள் உணர்ச்சியின்றி மூடிக்கொள்ளும். தாவரத்திற்கு
உணர்ச்சி உண்டு என்பதை நிரூபிக்க இந்தத் தாவரம் ஒன்றே
போதும்.
எந்த தாவரங்களை அப்பாவிகள் சாதுவானவை என்று
நம்பி வந்தோமோ அவற்றுள் உயிர்களை கொன்று உண்ணும் வகைகளும் (carnivorous plants) உள்ளன என்பதை
படம்பிடித்துக் காட்டும் வீடியோக்களும் இன்று இணையத்தில் உலா வருகின்றன. சில
தாவரங்களின் பூக்கள் புழுபூச்சிகளை தங்கள் அழகிய வண்ணத்தால் ஈர்த்து அவை அதன்மீது வந்து
உட்காரும்போது தொட்டாற்சிணுங்கி மூடிக்கொள்வதைப் போல இறுக்கமாக மூடி அவற்றைக்
கொல்கின்றன. சைவம் என்று மக்கள் ஆழமாக
நம்பியிருந்த தாவரங்களும் அசைவத்தின் மூலமே தங்கள் உணவுத் தேவையை நிறைவேற்றிக்
கொள்கின்றன என்பதை பசுக்காவலர்கள் அறிந்தால் அவர்களின் அடுத்த வாதம் என்னவோ?
தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில்
எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன்
ஒருவன் மட்டுமே. எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள இறைவன் அனுமதி
அளித்திருக்கிறான்.
'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும்
-பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.' (குர்ஆன் 2:168)
பசுவின் மீது மட்டுமல்ல இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து
உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம்
– இறைவன் இந்த
பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும்
படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இறைவன் படைத்தவைகளை
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது
மனிதனிடம்தான் இருக்கிறது.
= “இறைவன்
அருளிய உணவிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பம் செய்து கொண்டு
திரியாதீர்கள்”.(திருக்குர்ஆன்
2:60)
https://www.facebook.com/share/v/166YYAHWpV/
============