இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 பிப்ரவரி, 2017

ஏன் இவர்கள் இப்படி? மின் நூல் இரண்டாம் பதிப்பு

இந்நூலின் மின்பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் வாசிக்கலாம்:
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusbVM4dUdNUjRLRk0/view?usp=sharing

· இந்தியாவில் இன்று பாபரி மசூதி விவகாரம் அமைதி இன்மைக்கு மிகப்பெரிய ஒரு காரணமாக உள்ளது. முஸ்லிம்கள் ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அந்த அமைதியை நிலை நாட்ட, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா?
·  நாங்கள் எங்கள் தெய்வங்களுக்கு அர்பணித்த பிரசாதங்களை எங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு உங்களோடு உண்ண விரும்புகிறோம். அதை ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்? எங்கள் மனம் புண்படாதா?
·  வந்தே மாதரம் என்பது தேசபக்தியை வெளிப்படுத்தும் பாடலாகும். இதை முஸ்லிம்கள் ஏன் பாட மறுக்கிறார்கள்? இது அவர்களின் தேச விரோதத்தை எடுத்துக் காட்டவில்லையா?
·  ஆப்கானிஸ்தானில் பாமியானில் மாபெரும்  புத்தர் சிலை  உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாக இருந்தது. பல நாட்டு மக்களால் மாபெரும் கலைச்சின்னமாகவும் பௌத்தர்களால் வழிபடப்பட்டும் வந்தது. அச்சிலை சில வருடங்களுக்கு முன்னால் தாலிபான்களால் ஈவிரக்கமின்றி உடைத்தெறியப் பட்டது. இதை உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவேயில்லை. அது ஏன்?    
·  நீங்கள் ஏன் சிலைவழிபாட்டை எதிர்க்கிறீர்கள்?  நாங்கள் அந்த இறைவனை நினைவில் கொண்டு தானே சிலைகளை வழிபடுகிறோம், இதில் என்ன தவறு?
·  இஸ்லாமியர் என்றாலே பயங்கரவாதிகள், தீவிர வாதிகள் என்ற என்றுதானே அறியப்படுகிறார்கள்?

மேலே குறிப்பிட்டுள்ளவை முஸ்லிம்களைப் பற்றி முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளின் மனங்களில் எழும் ஒரு சில சந்தேகங்கள். இவை சந்தேகங்களாகத் தொடர்வது மேலும் பகைமைக்கும்  அமைதியின்மைக்கும்தான் வழிவகுக்கும். இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செய்யப் படும் ஒரு சிறு முயற்சியே இந்நூல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக